அதிசயம் - குளிரான பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திலும் பேரீச்சை பழம் காய்த்துள்ளது

(க.கிஷாந்தன்)

அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை பழ மரம் அதிக குளிரான பிரதேசமான நுவரெலியா மாவட்டத்திலும் வளர்ந்துள்ளது.

நுவரெலியா, தலவாக்கலை பகுதியில் தலவாக்கலை பொலிஸ் நிலைய அதிகாரிகளினால் பொலிஸ் நிலையத்தில் வளர்க்கப்பட்ட இந்த மரத்திலேயே பேரீச்சை பழம் காய்த்துள்ளது. இந்த மரத்தில் தற்போது 5 கொப்பு பேரீச்சை பழங்கள் காய்த்துள்ளன.

மரம் நாட்டப்பட்டு 35 வருடங்களின் பின் இந்த பேரீச்சை பழம் காய்த்துள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவற்றை காண்பதற்கென பெரும் எண்ணிக்கையிலானோர் வருகை தருகின்றமை குறிப்பிடதக்கது.