முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதல் படை வீரர்கள் மோடிக்கு கண்டன கடிதம்அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்
முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து 114 ஆயுதப் படை வீரர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பா.ஜ.க.ஆட்சியமைத்தது முதல் சகிப்புத்தன்மை அற்ற நிலையிலும், மாட்டுக்கறி விவகாரத்திலும் நாடு முழுவதும் உள்ள தலித்துகள் மற்றும் முஸ்லீம்கள் மீதான தக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் முஸ்லிம்கள் மற்றும் தலித்துகள் மீது நடந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்திய ஆயுதப் படைகளின் மூத்த 114 வீரர்களின் குழு மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "இன்று நமது நாட்டில் என்ன நடக்கிறது. 

உண்மையில் நமது அரசியலமைப்பு, படி நிற்க வேண்டும். இந்து மதத்தின் சுயமாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பாளர்களின் இடைவிடாத எச்சரிக்கை மூலம் சமூகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாக்குதலுக்கு நாங்கள் சாட்சியாக உள்ளோம். என கூறி உள்ளனர்.

மேலும் ஊடகவியலாளர்கள்,சிவில் சமூக குழுக்கள், பல்கலைக்கழகங்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அறிஞர்கள் மீது தேசிய விரோதமாக முத்திரை குத்துவது,அவர்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர்.