சிரிகொத்தவுக்குள் வைத்து ஞானசாரரை தாக்கிய ரணில் விக்ரமசிங்க! பரபரப்பு



ஞானசார என்ற நடிகனை வைத்து தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழு அரங்கேற்றிய நாடகம் தொடர்பில் மக்கள் தெளிவு பெற்றுவிட்டதாக  களுத்துறை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டார்.

களுத்துரையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தைகுறிப்பிட்டார்.

அங்கு மேலும் கருத்துவெளியிட்ட அவர் ..

முஸ்லிம்களின் வாக்குகளை மஹிந்த ராஜபக்‌ஷவிடம் இருந்து பிரிக்க அரங்கேற்றப்பட்  சதி நாடகம் பொதுபல சேனா நாடகம் என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களின் காலத்தில் இடம்பெற்ற சில நிகழ்வுகளை நாம் மீட்டுப் பார்த்தால் எமக்கு விடை கிடைத்துவிடும்.

எவராலும் அடக்க முடியாது என்ற விம்பத்தில் பறந்து திரிந்த ஞானசார தேரர் கடந்த மகிந்த அரசில் ஐக்கியதேசிய கட்சியின் தலைமை அலுவலகத்தினுள் நுழைத்து அடிவாங்கி வந்த விடயம் அனைவருக்கும்நினைவிருக்கும் என நினைக்கின்றேன்.

ஐக்கிய தேசிய கட்சியின் பக்கம் சிறுபான்மை மக்களை திருப்பவும் ஞானசார தேரருக்கும் ரணில்விக்கிரமசிங்கவுக்குமிடையில் எந்தவிதமான தொடர்புகளுமில்லை என மக்கள் நம்பவைக்கவும்அரங்கேற்றப்பட்ட ஒரு காட்சியே குறித்த சம்பவமாகும்.

அதே ஞானசார சதி நாடகத்தின் ஒரு பகுதியாகவே கோத்தாபய ராஜபக்‌ஷவை பொதுபல சேனா அவர்களதுகாரியாளயத்தை திறந்து வைக்க  அழைத்து அவருக்கு ஆதரவான ஒரு அமைப்பை போன்ற ஒரு மாயதோற்றத்தை உருவாக்கினார்கள்இந்த விடயங்களை நாட்டு சிறுபான்மை மக்கள் குறிப்பாக  முஸ்லிம்மக்கள் நம்பினார்.இந்த நல்லாட்சிக்கு வாக்கும் அளித்தனர்.

ஞானசார தேரர் தனக்கு பிடிக்காதவர்களை எல்லாம் உச்ச அளவில் விமர்சனம் செய்வார்இருந்த போதிலும்தன்னை அடித்து கேவலப்படுத்திய ரணிலை தனது இலக்கில் எப்போதும் கொள்ளவில்லை.அது ஏன் என்றவினாவில் பல விடயங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

அன்று  சிரிகொத்தவுக்குள் வைத்து எல்லை மீறிய ஞானசார தேரருக்கு தாக்குதல் நடத்த முடிந்த பிரதமர்ரணிலும் இன்று அவர் ஒரு மதகுரு என்பதால் அடக்க முடியாமலும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைஎடுக்க முடியாமல் இருப்பதுவே நகைச்சுவையாக உள்ளது.

அது போன்றுதான் மிக அண்மையில் ஞானசார தேரரை கைது செய்யும் நாடகமொன்றுநடைபெற்றிருந்தது.அந்த நாடகத்தோடு ஞானசார தேரர் தனது வாலை சுருட்டிக் கொண்டு அடங்கிவிட்டார் அதன் பின்னனியிலும் காராணம் இல்லாமல் இருக்க முடியாது.இதனை இவ்வரசுக்கு ஆரம்பத்திலேயேசெய்யத் தெரியாமலில்லைஎல்லா விடயமும் ஒரு நிகழ்ச்சி நிரலில் நடக்கிறது என்பது தான் இதில் நாம்அறிந்துகொள்ள வேண்டிய விடயமாகும். 

இந்த நாடகத்தில் ஞானசார தேரர் மிகவும் காரசாரமான வார்த்தை கொண்டு பிரதமர் ரணிலைதிட்டுகிறார்.நாடகமென்று வந்துவிட்டால் சொல்லிக் கொடுப்பதை சொல்லியேயாக வேண்டும்.அதில் ஒருவசனம் தான் குறித்த பிரதமர் ரணிலுக்கு எதிரான பகுதியும் கூடதன்னை கடுமையாக பேசிய ஞானசாரதேரரில் வார்த்தை தொடர்பில் பிரதமர் ரணில் வாய் திறக்கவே இல்லை.

ஞானசார தேரர் விடயத்தில் முஸ்லிம்கள் இவ்வரசின் மீது நம்பிக்கை இழந்திருந்தனர்அதனை சீர் செய்யும்ஒரு பகுதியாகவே பிரதமர் தொடர்பில் ஞானசார தேரர் சொல்லிக் கொடுத்ததை அப்படியே சொன்னார்.

பிரதமர் ரணில் தான் இக்கைதின் பின்னால் உள்ளார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார்.ஞானசார தேரரின்பின்னால் ரணில் உள்ளாரா என்ற வினாக்களை மக்கள் மனதிலிருந்து அழித்துவிடநினைத்தார்.ஜனாதிபதியே தன்னை பாதுகாக்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கினார்.இவை அனைத்தும்திட்டமிட்ட ஞானசார தேரர் நாடகத்தின் அங்கங்கள் என்பதையுன் இந்த நாடகத்தின் பல அங்கள் சந்தர்ப்பசூழ்நிலைகளுக்கு ஏற்ப அரங்கேரும் என்பதை மக்கள் நன்றாக புரிந்து கொள்ளவேண்டும் என அவர்குறிப்பிட்டார்.