கட்டார் அரசின் திடீர் தீர்மானம்

Jul 22, 20170 comments


வளைகுடாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க கட்டார் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிராந்திய அரபு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கட்டார் ஆட்சியாளர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி இணக்கம் தெரிவித்துள்ளார்.
கட்டாருடன் இராஜதந்திர உறவுகளை துண்டித்துக் கொண்ட நான்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வுக் காணும் எந்த தீர்மானமும், கட்டாரின் அரசுரிமையை மதிக்க வேண்டும் எனவும் ஆட்சியாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜூன் மாதத்திலிருந்து சவுதி அரேபியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், பஹ்ரைன், எகிப்து ஆகிய நாடுகள், கட்டாருடனான உறவைத் துண்டித்துக் கொண்டன.
பயங்கரவாதக் குழுக்களுக்கு கட்டார், டோஹா நிதி உதவி அளிப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கட்டார் பயங்கரவாத குழுக்களுக்கு அளிக்கும் பண உதவியை நிறுத்த எடுத்திருக்கும் இந்த முயற்சி, வாஷிங்டனுக்கு திருப்தி அளித்திருப்பதாக, அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியுள்ளார்.
Share this article :