அம்பாரை மாவட்ட சர்வமத பேரவையின் பொதுக்ககூட்டம் இறக்காமத்தில்



 அம்பாறை மாவட்ட சர்வமத பேரவையின்  பொதுக்ககூட்டம்  இறக்காமம் பிரசே சபை கேட்போர்கூடத்தில் எஸ்.எல்.பாறுக் (சட்டத்தரணி) அவர்களின் அழைப்பின் பேரில் New;W 29
 சனி (2017.07.29) ஒன்று கூட்டப்பட்டனர் இதற்கு வருகை தந்த தேசிய சமாதான பேரவையின்
 Tow vision I.அம்பாறை மாவட்ட   இணைப்பாளர் சாஹீரா அவர்களின் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இப் பேரவையில் மூன்று இனங்களின் மத தலைவர்களைக் கொண்டதாகவும் சிங்களம் .தமிழ் முஸ்லிம் அடங்கிய சுமார் 40 க்கு மேற்பட்ட அங்கத்தவர்களை கொண்டதாகவும் இப் பேரவை அமையப் பெற்றது குறிப்பாக அம்பாரை மாவட்டத்தில் உள்ள மக்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினையை இனம் கண்டு அவர்களுக்கு நல்லதொரு தீர்வினை பெற்றுக் கொடுப்பதே இப் பேரவையின் நோக்கமாகும்.

அந்த வகையில் இறக்காமத்திற்கு வருகை தந்த இக் குழுவானது இங்குள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டும் அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் உள்ள
 ஏனைய ஊர்களில் மக்கள் எதிர் நோக்குகின்ற பல பிரச்சினையையும் கேட்டறிந்து 
இறுதியில் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்பட்டன.

01. இறக்காமம் பிரதேச எல்லைக்குப்பட்ட மாணிக்கமடுவில்  சிலை சம்பந்தமாக முஸ்லிம்களின் காணிகளை அபகரிக்க நினைக்கும்  குழுவிடம் பேசி முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்படும் வகையில் ஒரு நல்லதொரு தீர்வு திட்டத்தைப் பெற்றுக் கொடுத்தல்

02 பெரும்பான்மை மொழிப்பிரச்சினை
குறிப்பாக வைத்தியசாலைகளில் சிங்களம். மற்றும் தமிழ், மொழி பிரச்சிணைகள் அத்தோடு
ஒரு சில பொலிஸ் நிலையங்களில் விசாரனைகள் சிங்களத்தில் எழுதப்படுதுதனால் என்ன எழுதப்பட்டது என்பது தெரியாமல் திண்டாடி வருகின்ற மக்களுக்கு ஒரு தீர்வினை பெற்றுக் கொடுத்தல்.

03 தம்பட்டை குளத்தில் மீன் பிடி சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறி  வெளி நபர்கள் மீன் பிடிப்பதை தடை செய்தல்.

04. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் இளைஞர்கள் மது குடிப் பழக்கத்திலிருந்து பாதுகாத்தலும் தடை செய்தலும்.

05 அம்பாரை தொகுதியில் அமைந்திரிக்கும் ஹிமிதுறாவ குளத்திற்க்கு பாதுகாப்பற்ற முறையில் குளிப்பதற்காக வரும் மக்களை பாதுகாத்தலும் எச்சரிக்கை விளம்பர பலகை இடலும். 

ஆகிய  05 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு இப்பேரவை இனிதே epiwTngw;wd.


எச்.றிஸ்வி(இறக்காமம்)