காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்று



R.Hassan

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 17 வயதுக்கு கீழ்பட்ட மாணவர்களுக்கான பூப்பந்து (பெட்மிண்டனர்) போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலய மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். 

இம்மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல் - ஹிறா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், சாதனையானர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.