வளைகுடாவில் நெருக்கடி நிலை! இலங்கையில் சவூதி இளவரசர்


சவூதி அரேபிய இளவரசர் அல்வலீட் பின் தலால் அப்துல்அஸீஸ் அல் சௌத் அவசர விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இன்று முற்பகல் 11.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை அவர் வந்தடைந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு சென்றவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.
ஜனாதிபதியை சந்திக்கும் சவூதி இளவரசர் இரு தரப்பு கலந்துரையாடல் ஈடுபடுவார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
சவூதி இளவரசருக்கும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.
இலங்கையில் நான்கு மணித்தியாலங்கள் மட்டும் தங்கியிருக்கும் அவர், பல்வேறு சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
வளைகுடாவில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சவூதி இளவரசரின் இலங்கை விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி கட்டார் நாட்டுடன் சவூதி அரேபியா உள்ளிட்ட ஐந்து நாடுகள் ராஜதந்திர உறவுகளை நிறுத்தியுள்ளன.
இந்நிலையில் குறித்த நாடுகளால் வழங்கப்பட்ட 13 கோரிக்கைகளை கட்டார் நிறைவேற்ற வேண்டும் என சவுதி அரேபியா நேற்று அறிவித்திருந்தது.
இது தொடர்பில் கட்டார் அவதானம் செலுத்த தவறினால் பாரிய விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.