மாணிக்கமடு சிறுவர் பூங்காவில் இருப்பிடம் இல்லை ; பிள்ளைகளின் பெற்றோர்கள் கவலைஇறக்காமம் பிரதேசத்திற்கு உட்பட்ட மாணிக்கமடு பிரதேசத்தில் அமைந்திருக்கும் சிறுவர் பூங்காவில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் போது அவ்வேளையில் பெற்றோர்கள் அதை மகிழ்வோடு பார்த்துக் கொண்டிருக்க  எந்த ஒரு இருப்பிடமும்.நிழல் வசதியும் இல்லாமல் மிகவும் திண்டாடி வருகின்றனர்.

இதே வேளையில் இப்பூங்காவிற்கு மாணிக்கமடு. இறக்காமம்.குடுவில். வரிப்பதான்சேனை ஆகிய பொது மக்கள் தங்கள் பிள்ளைகளுடன் வந்து செல்கின்றனர்.

குறித்த பூங்காவிற்கு மக்கள் இருப்பதற்கு ஒரு இருப்பிடமும் நிழல் வசதியும் இறக்காமம் பிரதேச சபை அமைத்து தருமா என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ஹுசையின் றிஸ்வி
இறக்காமம்