விவசாயத்தை கொண்டே நாட்டை கட்டியெழுப்ப முடியும் - ஜனாதிபதி


விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரத்தின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
விவசாயிகளுக்கு சிறந்த பொருளாதார நிலைமையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பல உணவு பொருட்களை நாட்டில் உற்பத்தி செய்து உணவில் தன்னிறைவு அடைய வேண்டும்.
இந்த நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். புனரமைக்கப்பட்ட கந்தளாய் கங்தலாவ யூனிட் 12 குளத்தை மக்களின் பயன்பாட்டுக்கு கையளிக்கும் நிகழ்வில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
மொரகஹாகந்த நீர்தேக்க திட்டத்தின் கீழ் அனுராதபுரம், பொலனறுவை, திருகோணமலை மற்றும் வடமேல் மாகாணத்தில் 700 குளங்கள் புனரமைக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.