வைத்தியசாலைகளுக்கு பிரதமர் எச்சரிக்கை

Jul 24, 20170 comments


டெங்கு நோயாளர்களின் பரிசோதனை அறிக்கைகளை விரைவாக பெற்றுக்கொடுக்காத வைத்தியசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டில் டெங்கு நோய்த் தாக்கம் தீவிரமடைந்து, நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 3 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
டெங்கு நோயாளர்களுக்கான இரத்த பரிசோதனை அறிக்கை வைத்தியசாலைகளில் விரைவாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.
இந்த நிலையில், அரச இரசாயன ஆய்வு கூடங்களின் நிறைவாண்டு நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது பிரதமர் மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.
டெங்கு நோயாளர்களின் பரிசோதனை அறிக்கைகளை விரைவாக பெற்றுக்கொடுக்க வைத்தியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
Share this article :