இந்தோனேசியாவில் மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகொப்டர் விபத்துஇந்தோனேசியாவில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்று மலையில் மோதி ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் நேற்றைய தினம் எரிமலை திடீரென வெடித்து சிதறியதில் 10 பேர் காயம் அடைந்திருந்த நிலையில், காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற போது அங்கிருந்த மலை ஒன்றுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் ஹெலிகொப்டரில் பயணம் செய்த 8 பேரும் அதே இடத்தில் உயிரிழந்துள்ளனர்.
அவர்களில் 4 பேர் கடற்படை அதிகாரிகள் எனவும் ஏனைய 4 பேரும் மீட்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.