மஹிந்த மைத்திரிக்கு உபதேசம்


தனக்கு வேண்டியவர்களைப் பழி தீர்க்கவே ஜனாதிபதி சில அமைச்சுப் பொறுப்புக்களையும், நிறுவனங்களையும் தன்னிடம் வழங்குமாறு அமைச்சரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2 வருடங்களாக ஐ.தே.கட்சியினரிடம் குறித்த அமைச்சுக்கள் இருக்கும் வரை எமது குடும்பமும், ஆதரவாளர்களும் பழிவாங்கப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்டனர். தற்பொழுது, போதாமைக்கு எமது ஸ்ரீ ல.சு.கட்சியினரும் எமக்கு அடிக்க அமைச்சுக்களை கேட்கின்றனர்.
பொறுப்பிலுள்ள ஒருவர் அவசரப்பட்டு ஆவேசமாக இவ்வாறு பேசுவது தவறு. பொறுமையாக இருக்க தெரிந்து கொள்ளவேண்டும். பழிவாங்குவது அவ்வளவு சிறந்த ஒரு பண்பல்ல எனவும் மாத்தறை வெலிகாமம் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ எம்.பி. மேலும் கூறியுள்ளார்.