சற்றுமுன்னர் வடராட்சியில் பொலிஸார் சூடு: இளைஞர் மரணம்!!


வடமராட்சி கிழக்குப் பகுதியில் ஒருவர் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
வல்லிபுரம் ஆலயத்துக்குச் செல்லும் சாலையில் 6 ஆம் கட்டைப் பகுதியில் இன்று பிற்பகல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதனால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது என்று அறிய முடிகின்றது.
உயிரிழந்தவர் 24 வயதுடையவர் என்று தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அவர் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்தார் என்றும், பொலிஸார் மறித்தபோதும் அவர் நிற்காத காரணத்தாலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் பொலிஸ் தரப்பால் கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. மந்திகை மருத்துவமனைக்கு வந்த பருத்தித்துறைப் பொலிஸாரின் ஜூப் மீது ஆத்திரமடைந்த மக்கள் கற்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.