மாலைதீவில் அரசியல் நெருக்கடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

தெற்காசிய நாடுகளில் ஒன்றான மாலைதீவு ஜனாதிபதியாக, அப்துல்லா யாமின் உள்ளார். அவரது அரசுக்கு எதிராக, அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. பாராளமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயன்று வருகின்றன. 

இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர்களை, அந்த நாட்டு அரசு கைது செய்து, சிறையில் அடைத்து வருகிறது. இதனால், எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தலைநகர் மாலேயில், பாராளமன்ற கட்டடத்திற்குள் செல்ல, எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் (23) திகதி முயற்சித்தனர். 

ஆனால், அந்த கட்டடத்தை ராணுவம் சுற்றி வளைத்தது. இரண்டாவது நாளாக நேற்றும், பாராளமன்றத்தின் உள்ளே, யாரும் செல்ல முடியாதபடி ராணுவம் தடுத்தது. எதிர்க்கட்சி, எம்.பி.,க்கள் மற்றும் தொண்டர்களை, கண்ணீர் புகை குண்டுகளை வீசி, போலீசார் கலைத்து வருகின்றனர். இதனால், மாலைதீவில் அரசியல் நெருக்கடி அதிகரித்துள்ளது.