வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ராணுவ ரீதியிலான மோதல் தொடர்ந்து வருகிறது. இதனால், வட கொரியா மீது பல்வேறு தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. இதனிடையே, அமெரிக்க மாணவர் ஓட்டோ வார்பீயர் வட கொரியா சென்றிருந்த போது, சிறு குற்றத்திற்காக வட கொரிய அரசு சிறையில் அடைத்தது.

கோமா நிலைக்குச் சென்ற பின்னர் சிறையிலிருந்து அவரை விடுவித்தது. கடந்த மாதம் ஓட்டோ வார்பீயர் மரணமடைந்தார். அப்போது, வட கொரியாவை அதிபர் டிரம்ப் சரமாரியாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், வட கொரியாவுக்கு அமெரிக்கர்கள் சுற்றுலாவோ அல்லது வேறு நிமித்தமாகவோ செல்ல தடை விதிக்க டிரம்ப் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று அமெரிக்காவிலிருந்து யாரும் வடகொரியாவுக்கு வருககை தரமாட்டார்கள் என தெரிவித்துள்ளது. அது வெளியிட்டு உள்ள தகவலில் அமெரிக்க குடிமக்கள் வடகொரியாவுக்கு பயணிக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த தடை ஜூலை 27 ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என கூறியிருந்தது.

வட கொரியாவிற்கு பயணம் செய்யும் எந்த அமெரிக்க நாட்டை சேர்ந்தவரும் 30 நாள் கருணைக் காலத்திற்குப் பிறகு அவர்களின் பாஸ்போர்ட் செல்லுபடியாகாது என அமெரிக்க அரசால் அறிவிக்கப்படும் என அதில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் இதனை அமெரிக்கா உறுதிபடுத்தவில்லை.

Share The News

Post A Comment: