மோட்டர் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழப்பு! பொரலந்த சம்பவம்(க.கிஷாந்தன்)

பொரலந்த கெப்பெட்டிபொல பிரதான வீதியில் பொரலந்த நகரத்தை அண்மித்த பகுதியில் 09.07.2017 அன்று இரவு 11 மணியளவில் இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

றாகம இராணுவ முகாமில் கடமையாற்றிய இளைஞனே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் வெலிமடை வங்கியகும்புர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொரலந்த பிரதேச வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டள்ளது.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை போகஹகும்புர மற்றும் வெலிமடை பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.