ஹாஜிகளுக்கு ஏ.சி குடை; கொட்டும் வெயிலில் குளிராக இருக்க முடியும்!இன்ஷா அல்லாஹ் இந்த வருடம்(2017) அனைத்து புனித ஹாஜிகளுக்கு தனித்துவமான இந்த குடை வழங்கப்படவுள்ளது .610 கிராம் உடையது இந்தக்குடை. இந்த குடையில் என்ன விஷேசம் என்றால் குடைக்கு மேல் பகுதியில் சோலார் அமைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு குடைக்குள் அமைக்கப்பட்ட மைக்ரோ குளிர் சாதனம் வேலை செய்கிறது. அதன் மூலம் குடை பிடித்தவர்கள் ஏ. சி அறையில் இருந்தது போன்ற அனுபவத்தை உணர்வார். புனித நகரங்களில் உள்ள வெப்பத்தை விட்டும் புனித ஹாஜிமார்களை பாதுகாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. என சவூதி ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது.