தேசியக்கொடியை தலைகீழாக ஏற்றிய அமைச்சர் ஹக்கீம் குழு!

நாட்டின் தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் சூடுபிடித்துள்ளது, முன்னாள் நீதியமைச்சராக இருந்த ஒருவர் இப்படி செய்திருப்பது மிகவும் கவலைக்குரியது என சிங்கள அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

பொதுபலசேனா மற்றும் ராவய அமைப்புக்களும் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்த வேளை தேசப்பற்றுள்ள தேசிய முஸ்லிம் இயக்கம் குறிப்பிட்டுள்ளதாவது,

நாட்டின் அமைச்சராக உள்ள ஒருவர் தேசிய கொடி ஏற்றப்படுகின்ற பொழுது இதுகுறித்து அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும், அல்லது அதற்கு மன்னிப்பு கோரியிருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.