பொத்துவில் வட மூஸா குளத்தினை புனரமைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்எம்.ஜே.எம்.சஜீத். 

கிழக்கு மாகாண எதிர்க் கட்சித் தலைவரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை அவர்கள் நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா அவர்களிடம் 4000 ஏக்கர் நெற் காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்கக் கூடிய வட மூஸா குளத்தினை புனரமைப்புச் செய்து தருமாறு கோரிக்கையிட்டதற்கு அமைவாக நீர்ப்பாசன அமைச்சர் விசேட அறிக்கையினை வழங்குமாறு பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளரினை கேட்டுக் கொண்டதற்கு இனங்க வட மூஸா குளத்தினை புனரமைப்பு செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் பொத்துவில் நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலயத்தில் இடம் பெற்றது. 

இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை, நீர்ப்பாசன பொறியியலாளர் சிறிவர்தன, பொத்துவில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நசீல், தேசிய காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஏ.பதுர்க்கான், பொத்துவில் பிரதேச முன்னாள் பிரதி தவிசாளர் ஹஸன் உட்பட விவசாய பிரதி நிதிகளும் கலந்து கொண்டனர்.