துர்க்கி ஜனாதிபதி ரஸெப் தையிப் அர்துகான் தனது நேச நாடான கட்டாருக்கு உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
வளைகுடா நாடுகளினால் தனிமைப்படுத்தப்பட்ட கட்டாருக்கு துருக்கியின் உதவிகள் எந்தவித குறைவும் இன்றி கிடைக்கப் பெற்றதாக கட்டார் தெரிவித்துள்ளது.
கட்டார் நாட்டில் துருக்கியின் இராணுவ முகாமும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கட்டார் நாட்டுக்கு தேவைப்படும் எந்தவிதமான உதவியையும் வழங்க துருக்கி முகாமிலுள்ள படையினர் தயாராக இருப்பதாகவும்  கூறப்படுகின்றது.
துருக்கி ஜனாதிபதி தனது பாரியார் எமீன் சகிதம் கட்டாரின் தோஹா நகருக்கு வருகை தந்துள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
கட்டார் அமீரினால், துருக்கி ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்விஜயத்தில் கட்டார் நெருக்கடி தொடர்பில் விரிவாக இரு நாட்டுத் தலைவர்களும் ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
சவுதி தலைமையிலான வளைகுடா நாடுகள் கட்டாருக்கு விதித்துள்ள நிபந்தனைகளுள், துருக்கியுடனான உறவைத் துண்டித்து விடுவது பிரதானமானது. இருப்பினும், கட்டார் அந்த நிபந்தனையை ஏற்க மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Share The News

Post A Comment: