கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித்த போகொல்லாகம
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, ஜனாதிபதியின் செயலராக பதவியேற்கவுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர்   பதவிக்கு ரோஹித்த போகொல்லாகம சற்றுமுன்  ஜனாதிபதியால் நியமிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை புதிய பாதுகாப்பு    செயலாளராக   கபில  வைத்தியரத்ன ,  ஜனாதிபதியின்    செயலாளராக  ஒஸ்ரின் பெர்னான்டோ மற்றும்    ராணுவ  கொமாண்டராக  மகேஷ்    சேனாநாயக்க ஆகியோரும்  ஜனாதிபதியால் நியமிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரோஹித்த போகொல்லாகம முன்னாள் அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.