இராணுவனத்தினருக்கும் முஸ்லிம் வைத்தியருக்குமிடையில் முறுகல் உச்சம்!

File Image 

அக்கரைப்பற்று நகரத்தின் பிரதான வீதியில் வைத்தியர் ஒருவருக்கும் இராணுவத்தினருக்கும் நேற்று  இரவு முறுகல் நிலை ஏற்பட்டதாக எமது சிலோன் முஸ்லிம் பிராந்திய செய்தியாளர் முஹம்மட் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று பிரதான வீதியில் பயணித்த வைத்தியரின் கார் மீது உரசி விட்டு ( Side Mirror )  வேகமாக சென்ற ரெக் ஒன்றை பின்னால் சென்று, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் முன்பாக  மடக்கிப்பிடித்த வைத்தியர் இராணுவ அதிகாரிகளை கடும் போக்கான முறையில் திட்டியுள்ளார் அதன் வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. இச்சந்தர்ப்பத்தில் இராணுவ அதிகாரிகளுக்கும் வைத்தியருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, சீருடை அணிந்த அதிகாரிகளை எப்படி திட்டலாம் என்பதே அதிகாரிகளின் கருத்து.

குறித்த விபத்தின் விசாரணையை அக்கரைப்பற்று பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.