ஊடகவியலாளரை மிரட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன்!பாறுக் சிஹான்


வடக்கு மாகாண முன்னாள் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா மீதான குற்றச்சாட்டு தொடர்பில்  செய்தி வெளியிட்ட ஊடகவியலாளரை  கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் எச்சரித்துள்ளார்.

தொலைபேசி ஊடாக குறித்த ஊடகவியலாளரை தொடர்பு கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் தானே வடக்கு மாகாண விடயத்தில் தலையிட்டு   செயற்பட்டிருந்ததாக   நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞான் சிறீதரன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

பின்னர் குறித்த ஊடகவியலாளரை மீண்டும் தொடர்பு கொண்டு  பாராளுமன்ற உறுப்பினர்    சிறிதரன் குறித்த செய்தி தொடர்பாக அதிருப்தியை தெரிவித்து     அவரை (ஊடகவியளார்) கடுமையாகச் சாடியுள்ளார்.

அதன் போது அவர்    பிரிவு ரீதியிலான குரோரதத்தையும் வெளியிட்டிருக்கின்றார். இதேபோல பல்வேறு விடயங்களை அவர் தன் வாயிலாக வெளியிட்டிருக்கின்றமை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.