பாடசாலைகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம்(க.கிஷாந்தன்)

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைதிட்டம் 28.07.2017 அன்று முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோருடன் இணைந்து குறித்த வேலைத்திட்டத்தில் முப்படையினரும் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த வேலைத்திட்டமானது 28 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், 29 ஆம் திகதி சனிக்கிழமையும், 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 தினங்களிலும் குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்தவகையில் மலையகத்திலும் அனைத்து பாடசாலைகளிலும் டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகாமையிலுள்ளோர் ஒன்றிணைந்து பாடசாலையையும் அதனை அண்டியுள்ள பகுதிகளையும் துப்புரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது நுளம்புகள் பரவும் இடங்களை அழித்து புகை விசுறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, பாடசாலை வளவுகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடக்கது.

இதுவேளை, குறித்த டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு முப்படையினர், காவற்துறையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையணியினர் இணைந்து கொண்டமை குறிப்பிடதக்கது.