தூதரக தடையால் பாதிப்பு: அரபு நாடுகளிடம் நஷ்டஈடு கேட்கும் கத்தார்சவுதி அரேபியா, எகிப்து உள்ளிட்ட நாடுகள் விதித்த தூதரக தடையால் தங்கள் நாட்டு அரபு நாடுகளிடம் நஷ்டஈடு கேட்கும் கத்தார்

தீவிரவாதிகளுக்கு நிதி உதவி செய்வதாக கத்தார் நாட்டின் மீது சவுதிஅரேபியா, எகிப்து, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட 4 நாடுகள் தூதரக தடை விதித்தன. அதை தொடர்ந்து தங்கள் நாடுகளில் தங்கியிருக்கும் கத்தார் நாட்டினர் வெளியேற உத்தரவிட்டது.

விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் தங்களது நாட்டைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள் கம்பெனிகள் கத்தார் ஏர்வேஸ் விமான நிலையம் மற்றும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கத்தார் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எனவே தடை விதித்துள்ள அரபு நாடுகள் வர்த்தக நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதற்காக கமிட்டி அமைத்துள்ளது.

மாலைமலர்