மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் தோப்பூர் மாணவன் சாதனைஎம்.ஜே.எம்.சஜீத்

தற்பொழுது நடை பெற்றுக்கொண்டிருக்கும் மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் தோப்பூர் அல்லை நகர் அல் ஸிபா வித்தியாலயத்தின் மாணவன் எச். எம். அஸ்கி  என்பவர் 14 வயதுக்கு உட்பட்ட  குண்டு போடுதல் போட்டியில் 2ம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட விளையாட்டு போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 இவர் இன்னும் பல சாதனை படைக்க வேண்டும் என்று பாடசாலை சமூகம் வாழ்த்துகின்றது. இப்பாடசாலையில் தேசிய மட்டம் செல்லுகின்ற முதல்  மாணவரும் இவர் ஆவார்.