அக்கரைப்பற்று நீதிமன்ற சட்டத்தரணிகள் கண்டனம் தெரிவிப்பு

ஹுசையின் றிஸ்வி
இறக்காமம்

 இளஞ்செழியன் ஐயா துப்பாக்கி முனையில் தாக்கப்பட்டதை கண்டித்து இன்று 24 திங்கள்  வடக்கிலும். கிழக்கிலும் பாரிய கண்டனம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
இதேவேளை வடக்கின் சட்டத்தரணிகள் சங்கங்களின் ஏற்பாட்டின் பேரிலே இந்த கண்டனம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

 இதே நேரத்தில் அக்கரைப்பற்று சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டினாலும் எதிர்ப்பு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது.  இச் சங்கம் சார்பாக சட்டத்தரணி M.M.பஹீஜ் கருத்து தெரிவிக்கயில் 
கிழக்கின் திருகோணமலை, மட்டக்களப்பு .கல்முனை அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை பொத்துவில் ஆகிய நீதிமன்றங்களின் சட்டத்தரணிகள் சங்கம் தங்களது கண்டனத்தினையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் துப்பாக்கி முனையில் தாக்கப்பட்டு உயிர்யிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹேமந்த அவருக்கும் அவரது குடும்பத்தினர்க்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவிக்கின்றோம்
அத்தோடு இச் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்து நீதியை நிலை நாட்டும் நீதிபதிகளுக்கு மேலும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம் என்று தனதுகருத்தை முன்வைத்தார்.

இதன் போது சட்டத்தரணி S. ஜெஹ நாதன் அவர்களும் தனது கண்டன கருத்தினை தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சட்டதரணிகளான சக்கீக், சமீம், பாஹிம் ஆகியோரும் இதன்போது கருத்துரைத்தனர்