நீண்ட வரட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழை - மக்கள் மகிழ்ச்சி



(க.கிஷாந்தன்)

நீண்ட வரட்சிக்குப் பின்னர் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் 27.07.2017 அன்று மதியம் காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது.

பதுளை மாவட்டத்தில் கடந்த காலங்களில் கடுமையான வரட்சி ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக, விவசாயிகள் பாரிய நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தனர்.

இந்த நிலையிலேயே தற்போது, இருளான காலநிலையோடு, இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது. பயிர்ச் செய்கையாளர்களுக்கு தற்போது பெய்து வரும் மழை, மிகவும் பலனுள்ளதாக அமைந்துள்ளது.

எனினும் கடந்த சில மாதங்களாக குடிநீருக்காக மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தனர். இந்நிலையில் பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளில் மழைபெய்து வருகின்றமையினால் மக்கள் தமது மகிழ்வை வெளிப்படுத்தி வருகின்றனர்.