கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்


பல்கலைக்கழக வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கமெராக்கள்  உடனடியாக அகற்றப்படவேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள், பாரிய  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு - வந்தாறுமூலை வளாக முன்றலில், இன்று (27) காலை, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பட்ட கால எல்லைக்குள் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்தல், “மஹாபொல“ புலமைப்பரிசில் பிரச்சினையை நிவர்த்தி செய்தல், விடுதிப் பிரச்சினையை நிவர்த்தி செய்தல், அசாதாரணமான வகுப்புத்தடையை நீக்குதல், சி.சி.டி.வி கமெராக்களை அகற்றுதல் ஆகிய கோரிக்கைகள், மாணவர்களால் இதன்போது முன்வைக்கப்பட்டன.