டெங்கு நோய் காரணமாக பாடசாலை மாணவர்கள் இருவர் உயிரிழப்பு(க.கிஷாந்தன்)

டெங்கு நோய் காரணமாக பதுளை பெரிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இரு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இசுரங்க விஜேவர்தன மற்றும் சசிகுமார் கவீஸ் என்ற மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இசுரங்க விஜேவர்தன என்ற மாணவன் டெங்கு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 02.07.2017 அன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, சிகிச்சை பெற்று வந்த நிலையில் பதுளை சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி கற்கும் சசிகுமார் கவீஸ் என்ற மாணவன், 03.07.2017 அன்று உயிரிழந்துள்ளார்.

தற்போது, பதுளை பெரிய வைத்தியசாலையில் 61 பேர் டெங்கு நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.