Header Ads

ad728
  • Breaking News

    நவாப் ஷெரீப்புக்கு புது சிக்கல்



    பாகிஸ்தானில் கில்கிட், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் சுதந்திர நாடு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றன. அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டம் நடைபெறும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், கில்கிட் மற்றும் பலுசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் பாதுகாப்பு படை மனித உரிமைகள் மீறலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

    இந்நிலையில், கில்கிட், ஆக்கிரமிப்பு காஷ்மீர், பலுசிஸ்தான் போல் சிந்து மாகாண பகுதியில் இன்று சுதந்திர நாடு கோரிக்கையை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுதந்திர கோஷங்களை எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். சிந்து மகாணத்தில் சில தேசியவாத கட்சிகள் இந்த பேரணியை தலைமை ஏற்றி நடத்தியது.

    சீனாவின் பொருளாதார வழிப்பாதை திட்டம், தீவிரவாதம் உள்ளிட்டவற்றிற்கு எதிராக முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அவர் சென்றனர்.

    பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக போராட்டம் நடைபெற்றுள்ளது ஏற்கனவே சிக்கலில் தவித்து வரும் நவாஸ் ஷெரிப்புக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728