எனக்கு நீதி வேண்டும் இரண்டு நாளாக தொடரும் உண்ணா விரதப்போராட்டம்
இறக்காமத்தை சேர்ந்த எஸ்.டி.நியாஸ்என்பவர் நேற்று பிற்பகல் 2.00 மணியில் இருந்து இறக்காமம் ஆலையடிச்சந்தியில் உண்னாவிரத போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

அங்கு எமது விசேட செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர் அங்கு சென்றபோது அவர் தெரிவிக்கையில்,

நான் கடந்த 17வருடங்களாக சிவில் பாதுகாப்பு படைப் பிரிவில் கடமை புரிந்துள்ளேன் இதில்  நான் 14வருடங்கள் அங்கவீனராகவும் கடமை புரிந்திருக்கின்றேன். எனக்கு எந்த வித முன் அறிவித்தலும் இன்றி தனது சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளேன். 

தனக்கும் தன்னுடன் பாதிக்கப்பட்டு சுமார் நூற்றுக்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்பு படையினரும் தொழில் இழந்த நிலையில் இருப்பதாகவும் தங்ககளை இடைநிநுத்திய மோஜற் வற்ன குலசூரிய என்ர்அதிகாரி முஸ்லீம் படையினர்க்கு இன துவேசம் பார்ப்பதாகவும் இந்த நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் நம்பிய நிலையில் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட எங்கள் அனைபேருக்கும் மீண்டும் தொழில் வழங்க வேண்டும்.

என்று தனது கோரிக்கையை முன்வைத்தார் மேலும்   எனக்கு நீதி கிடைக்கும் வரை நான் சாகும்வரை இந்தப்போராட்டத்தை விடப்போவதும் இல்லை என்று அவர் தெரிவித்தார்.

விசேட செய்தியாளர் எஸ்.எம்.சன்சீர்