வட்டைமடு வன இலாக்கா திணைக்களத்திடம் ஒப்படைப்பு; விவசாயிகளுக்கு ஆப்பு


படமும் பத்தியும் - பஹத் ஏ.மஜீத்

பொத்துவில் - வட்டைமடு மேய்ச்சல் நிலம் திம்பிரிகொல்ல சரணாலயத்திற்கு சொந்தமானது எனக்கருதி அதனை பராமரிக்கும் பொறுப்பு வன இலாக்கா திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மிக நீண்ட நாட்களாக வட்டைமடு மேய்ச்சல் தரை பூமி என்று மாட்டுக்காரர்களும், விவசாயபூமி என்று வயல்காரர்களும் சண்டைபிடித்து அடிதடிவரைக்கும் சென்றது, புலிகள் காலத்தில் விவசாயம் செய்ய யாரும் செல்வதில்லை ஆனால் யுத்தம் நிறைவுற்ற பிறகு விவசாயம் செய்ய எண்ணிய விவசாயிகளுக்கு பாரிய எதிர்ப்பு காத்திருந்தது, விவசாயம் செய்யாமல் 20வருடங்கள் இருந்ததால் அந்நிலம் மேய்ச்சல் தரையாகியது. 

இன்று மாடுகளுக்கு கடும் கிராக்கி ஆனால் மாடுகளை மேய்ச்சலுக்கு விட நிலம் இல்லை, மாட்டுக்காரர்களுக்கும் சந்தோசம் 1500 ஏக்கரில் மாடுகளை மேயவிடலாம் என்று! வட்டைமடு நிலத்திற்கான போராட்டம் அல்ல இது வியாபாரப்போட்டி ஒன்றில் மாட்டுக்காரர்கள் வெல்ல வேண்டும் அல்லது வயல்காரர்கள் வெல்ல வேண்டும். 

இதை வைத்து உள்ளுர் அரசியல்வாதிகள் உட்பட தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சித்தலைவர்கள் கூட மூக்கை நுழைத்தனர் இதை வைத்து காலம் காலமாக அரசியல் செய்தனர்.

இறுதியில் வன இலாக்கா வசமாகியது! காரணம் வட்டைமடு மேய்ச்சல் நிலம் திம்பிரிகொல்ல சரணாலயத்திற்கு சொந்தமானது.