அரசாங்கம் உடனடியாக பதிலளிக்க வேண்டும்


மத, இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பது தொடர்பில் மகா சங்கத்தினர் வெளியிட்ட அறிவிப்பு குறித்து அரசாங்கத்திடமிருந்து கிடைத்த பதில் திருப்திகரமானதாக இல்லையெனவும், அவ்வறிக்கையில் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் பாரபட்சமின்றிய விசாரணை அறிக்கையொன்றை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்துமாறும் மூன்று மகா சங்கத்தினர்  மற்றும் அனைத்து பிக்குகள் அமைப்பு என்பன இணைந்து அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளத்தக்க நியாயங்களின் அடிப்படையில் இன, மத, வர்க்கவாத நோக்கில் அல்லாமல் சுயாதீன ஆணைக்குழுவொன்றை நியமித்து அதனூடாக எமது நாட்டுக்குத் தேவையான விபரங்களை சேகரித்து அறிக்கையொன்றைத் தயார் செய்யுமாறும் மகா சங்கத்தினர் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அஸ்கிரிய மகா விகாரைப் பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் அறிவித்துள்ளார்.