இலங்கை தேசிய மகா சங்க சபை அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் அரசுக்கு எச்சரிக்கைஉத்தேச அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டால் நாடு குழப்ப நிலைக்கு உள்ளாகும் என இலங்கை தேசிய மகா சங்க சபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அந்த சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் இதனைக் குறிப்பிட்டார்.
அரசியலமைப்பு உருவாக்க சபையில் அரசசார்பற்ற நிறுவனங்களில் இருந்த ஒரு சிலர் உள்ளடக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி என்ற ரீதியில் அவர்களது அபிலாஷைகளுக்கு அமைய அரசியலமைப்பை கொண்டு வர முடியாது.
இதற்காக மகாநாயக்கர்களை தூற்றி எந்தவித பயனும் இல்லை. தேசிய கொள்கை திட்டமிடல் சபை ஒன்று ஸ்தாபிக்கப்படும் என ஜனாதிபதி நாட்டு மக்களிடம் அறிவித்திருந்தார்.
ஏன் அதனை இன்னும் மேற்கொள்ளவில்லை.
இரண்டு பிரதான கட்சிகளும் இணங்க கூடிய செயற்பாடுகளை முதலில் மேற்கொள்ள வேண்டும். இவற்றை மேற்கொண்டால் நல்லிணக்கம் அல்ல தீர்விணக்கம் ஏற்படும் என அத்துரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.