வல்லரசு நாடுகளுக்கு எதிராக இலங்கை வாக்களிப்பு!


அணுவாயுதங்களை தடை செய்வதற்கான ஐ.நா ஒப்பந்தத்திற்கு இலங்கை உட்பட 122 நாடுகள் அங்கீகரித்துள்ளன. நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் நேற்று இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அணுவாயுதங்களை தடை செய்வதற்காக நடத்தப்பட்ட ஐ.நா கூட்டத்தை ஒன்பது நாடுகள் புறக்கணித்துள்ளன. அமெரிக்க, பிரித்தானியா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், வடகொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய 9 நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக நம்பப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் நெதர்லாந்து மட்டுமே பங்கு பற்றியிருந்தது. அதன் பிராந்தியத்தில் அணு ஆயுதங்களை வைத்திருந்தாலும் அமெரிக்க ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளது. சிங்கப்பூர் வாக்குப்பதிவில் இருந்து ஒதுங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.