சிரிய நாட்டு அகதிகளை அரவணைத்த கனடிய பிரதமருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சிஅபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

சிரியா உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்டு புகலிடம் பெற்ற தம்பதியினர், கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தங்களுக்கு பிறந்த குழந்தைக்கு பிரதமரின் பெயரை சூட்டியுள்ளனர்.

2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கல்கேரியில் குடியேறிய அஃப்ரா மற்றும் மொயி பிளால் என்ற தம்பதியினரே இவ்வாறு தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு ஜஸ்ரின் ட்ரூடோ ஆடம் பிளால் என பெயர் வைத்துள்ளனர்.

கல்கேரி நகரில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றிற்காக சென்றிருந்த பிரதமர் ஜஸ்ரின், தன்னுடைய பெயரை சூட்டியுள்ள குழந்தையை சந்திக்க வேண்டும் என கூறியதையடுத்து பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். இதன்பின் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் அவர்களுடைய குழந்தையை தன்னுடைய கைகளில் ஏந்தி கொஞ்சினார்.

குழந்தையின் நலம் மற்றும் பெற்றோரின் வசதிகள் குறித்து கேட்டறிந்து விட்டு பிரதமர் நிகழ்ச்சிக்கு திரும்பினார்.