றிசாதின் முகத்திரை கிழிக்கப்படும் - ஜென்சி ராணி மக்கள் மத்தியில் பகீர் உரைஅகதியாய் சொப்பிங் பேக்குடன் வந்த றிசாத் இன்று எப்படி பல்லாயிரம் கோடிக்கு சொந்தக்காரர் ஆனார் என்பது பற்றிய இரகசியங்களும் அவர் செய்த ஊழல்களும் விரைவில் வெளியிடப்படும் அன்று அவரின் முகத்திரை கிழிக்கப்படும் என தேசிய காங்கிரசின் மகளிர் பிரிவு பொறுப்பாளர் ஜென்சி ராணி குறிப்பிட்டார்.

தேசிய காங்கிரசின் வடமாகாண சுற்றுப்பயணம் இடம்பெற்று வருகிறது, அதாஉல்லா அவரின் சொந்த ஊருக்கு நிறையவே செய்திருக்கிறார் ஆனால் அமைச்சர் றிசாத் பிறந்த ஊர் வளர்ந்த ஊர் எவற்றிற்குமே செய்யவில்லை, இன்றும் நுாற்றுக்கணக்கான யுத்ததால் பாதிக்கப்பட்ட விதவைகள் இளைஞர்கள் வாழ வழியின்றி புத்தளத்திலும், மன்னாரிலும் வசிக்கின்றனர் அதை விட்டுவிட்டு அம்பாறைக்கு சென்று அங்கு 5000 ரூபா கொடுப்பதும், வீர வசனங்கள் பேசி தான்தான் தேசிய தலைவர் என்றும் பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

முஸ்லிம் ஊடகம் எனும் பெயரில் ஆரம்பித்து விட்டு இன்று அது சினிமா ஊடகமாக மாறிவிட்டது, அதற்காக சவூதியிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றார் அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபிப்போம் என்றார்.