வாழைச்சேனை வடமுனை ஊத்துச்சேனையில் தற்காலிக பொலிஸ் நிலையம்வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட வடமுனை ஊத்துச்சேனை எனும் கிராமமானது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ள மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக பல கிலோ மீற்றர்களை கடந்து செல்கின்றனர்  அதில் ஒன்றுதான் பொலிஸ் சேவையாகும்.

பொலிஸ் நிலையத்திற்கு செல்லவேண்டுமாயின் வாழைச்சேனைக்கு சென்று பல மணி நேரங்கள் பயணித்து இதற்காக ஒருநாளை செலவிடுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தினூடாக குறிப்பிட்ட கிராமத்தில் தற்காலிக பொலிஸ் சேவை அமைக்கப்பட்டு மக்கள் தேவைகளுக்காக நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர அவர்களின் வழிகாட்டலில் நேற்று 20.07.2017 வியாழக்கிழமை காலை 8மணிக்கு வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி பெரமுனை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகான பிரதிப் பொலிஸ்மா அதிபர், மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், சமூக பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ். ஹாறூன் (ஸஹ்வி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன்போது குறிப்பிட்ட கிராம மக்களுக்கு தென்னங்கன்றுகளும் சிறுவர்களுக்கான கற்றல் உபகரகணங்களும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டன.

செய்தியாளர்
எம்.ஐ.அஸ்பாக்