இந்தியா-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இன்று நிலநடுக்கம்ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையோரப் பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

பூமியின் அடியில் பத்து கிலோமீட்டர் ஆழத்தில் இன்று மாலை 3.42 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 5.2 அலகுகளாக பதிவாகியுள்ளதாக டெல்லியில் உள்ள தேசிய புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.