கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்கு, பாடசாலை ரீதியாக இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-1(இ)க்கு ஆங்கில டிப்ளோமா தாரர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பொதுச் சேவை  ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.டபிள்யு.ஜி. திஸாநாயக்க தெரிவித்தார்.

நேர்முகப் பரீட்சை மூலம், இந்நியமனங்கள் வழங்கப்படவிருப்பதுடன், தெரிவுசெய்யப்படுபவர்கள், இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1(இ)க்கு உள்வாங்கப்படுவார்கள்.ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதியன்று, 18 வயதுக்குக் குறையாதவராகவும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருப்பதோடு, விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னதாக குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்காவது, கிழக்கு மாகாணத்தில் வசித்தல் வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவகத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட 
தேசிய அல்லது உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மற்றும் க.பொ.த உயர் தர பரீட்சையில் 3 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை, செயலாளர், மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு, கிழக்கு மாகாணம், 198, உட்துறைமுக வீதி, திருகோணமலை எனும் முகவரிக்கு, ஓகஸ்ட் மாதம் 18ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு, ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

சிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலயம்.