முஸ்லிம் காங்கிரசை யாராலும் அசைக்க முடியாது - முன்னாள் தவிசாளர் யு.கே.ஜெபீர்எஸ்.எம்.சன்சீர் - Ceylon Muslim சிறப்பு செய்தி அலுவலகம்


தேர்தலை இலக்கு வைத்து மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வரும் நோக்கில் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முனைகின்றனர்.ஒவ்வொறுவருக்கும் தனிப்பட்ட நிகழ்சிசி நிரலின் படியே அவர்கள் இயங்குகிறார்கள்.

கட்சி பிரமுகர்கள் முஸ்லிம் காங்கிரஸை விட்டு விலகலாம் ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்களின் கட்சியல்ல இக் கட்சி எதையுமே எதிர் பார்க்காத சுயநலமற்ற போராளிகளின் கட்சி அதனால்தான் இதை அழிக்க முடியாமல் எதிரிகள் திணறுகின்றனர்.

முன்னாள் செயலாளர் ஹஸனலி தனது சொந்த ஊரில் ஒரு ஆயிரம் வாக்குகளைக் கூட பெற முடியாத நபராவார் முஸ்லிம் காங்கிரஸில் இருக்கும் போதே பெற முடியாத வாக்குகளை அதாஉல்லாவோடு இணைந்து பெறப் போகின்றார்.

அதே போன்று பாலமுனையில் சகல கட்சிகளுக்கும் மொத்தமாக அளிக்கப்படுகின்ற வாக்குகள் 3500 இதில் அன்ஸில் எத்தனை வாக்குகளைப் பெற்று தனது கூட்டமைப்புக்கு பலம் சேர்க்கப் போறார்.


எனவே காலத்திற்கு காலம் கட்சியை விட்டு வெளியில் செல்பவர்கள் ஏராளம் அதே போன்று வெளியில் செல்பவர்களுக்கு மாற்றீடாக மீண்டும் கட்சியில் இணைவது காலம் காலமாய் நடைபெறும் சம்பவமாகும்.அதற்கமைவாக சென்ற காலங்களில் இறக்காமம் பிரதேசத்தில் எமது கட்சிக்கு எதிராக செயற்பட்ட அதிகமான இளைஞர்கள் இன்று எமது கட்சியில் இணைந்து செயற்பட முன் வந்துள்ளனர் அவர்களுக்கு எனது  நன்றியை  தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த வகையில் இறக்காமத்தின் 95 வீதமான வாக்குகள் எதிர்வரும் தேர்தலில் எமது கட்சிக்கு இலகுவாக கிடைக்கும் அவ் வீதத்தை நூறு வீதமாக மாற்றுவதற்கே நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

இன்று இறக்காமம் பிரதேசத்தில் வரலாறு காணாத அபிவிருத்திகளை முஸ்லிம் காங்கிரஸ் செய்து வருகின்றது இதை எம் மக்கள் சந்தோசத்துடன் வரவேற்கின்றனர் என்றார் முன்னாள் தவிசாளர் ஜெபீர் மௌலவி.