விமானங்களில் மடிக்கணினிகளை எடுத்து வர விதித்த தடை நீக்கம்: அமெரிக்கா நடவடிக்கை

Jul 21, 20170 comments8 மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளின் 10 விமான நிலையங்களில் இருந்து வருகிற விமானங்களில் பயணிகள் தங்களுடன் மடிக்கணினி, டேப்லட் கம்ப்யூட்டர், கேமரா, டி.வி.டி. பிளேயர், ஐபாட், மின்னணு விளையாட்டு சாதனங்கள் ஆகியவற்றை எடுத்து வருவதற்கு அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்து சென்ற மார்ச் மாதம் உத்தரவிட்டது.

தடை விதிக்கப்பட்டுள்ள 8 நாடுகளின் 10 விமான நிலையங்கள் பட்டியலில் அம்மான் (ஜோர்டான்), கெய்ரோ (எகிப்து), இஸ்தான்புல் (துருக்கி), ஜெட்டா (சவுதி அரேபியா), ரியாத் (சவுதி அரேபியா) குவைத் சர்வதேச விமான நிலையம், கசபிளாங்கா (மொராக்கோ), தோஹா (கத்தார்), துபாய் இன்டர்நேஷனல் (ஐக்கிய அரபு அமீரகம்) அபுதாபி (ஐக்கிய அரபு அமீரகம்) ஆகியவை இடம் பெற்றிருந்தன.

இந்த தடை காரணமாக எமிரேட்ஸ், எதிஹாட் ஏர்வேஸ், கத்தார் ஏர்வேஸ், துருக்கி ஏர்லைன்ஸ், சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ், ராயல் ஜோர்டானியன், குவைத் ஏர்வேஸ், எகிப்து ஏர், ராயல் ஏர் மாரோக் ஆகியவை பாதிப்புக்குள்ளாகின. இந்த விமானங்கள், அமெரிக்காவுக்கு நேரடியாக இயக்கப்படுபவை ஆகும்.

இப்போது இந்த தடையை அகற்றி அமெரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை, நேற்று முன்தினம் டுவிட்டரில் உறுதி செய்துள்ளது. 
Share this article :