விண்ணில் செலுத்திய அதிக எடை கொண்ட சீன ராக்கெட் வெடித்துச் சிதறி விபத்துஅதிக எடை கொண்ட அதி நவீன ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கான சோதனைகளை சீனா அவ்வப்போது நடத்தி வருகிறது.

அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நேற்று காலை ஷிஜியான்-18 என்னும் செயற்கைகோளுடன் ‘லாங் மார்ச்-5 ஒய் 2’ என்ற நவீன தொழில் நுட்பம் கொண்ட ராக்கெட்டை ஹைனன் மாகாணத்தில் உள்ள வென்சாங் என்னும் இடத்தில் இருந்து விண்ணில் செலுத்தியது. 7.5 டன் எடை கொண்ட இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்த சிறிது நேரத்திலேயே வெடித்து சிதறியது.

ராக்கெட் வெடித்ததற்கு அதன் இயல்பு நிலையில் மாற்றம் ஏற்பட்டதுதான் காரணம் என்று சீன விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லாங் மார்ச்-5 ஒய்-2 ராக்கெட், 25 டன் எடையை சுமந்து செல்லக் கூடியது ஆகும். ஏற்கனவே இதுபோன்ற ராக்கெட் சோதனையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சீனா நடத்தியிருப்பது நினைவு கூரத்தக்கது.