நீதிமன்றம் தீர்ப்பு-பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு


காவல் திணைக்களச் சட்டத்தின் கீழ் மதுபானம் வைத்திருக்கும் சந்தேகநபர்கள் தொடர்பில் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல பொலிஸாருக்கு அதிகாரம் உண்டென கல்கமுவ மஜிஸ்ட்ரேட் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
கல்கமுவ மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டிருந்த இது தொடர்பான  பல வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.
பொலிஸார் சார்பில் பொலிஸ் சட்டப்பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண, பொலிஸ் அதிகாரியும் சட்டத்தரணியுமான ருவன் குணசேகர ஆகியோர் ஆஜராகியிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.