டொனால்ட் டிரம்பிற்கு நட்சத்திர ஹோட்டலில் அறை கொடுக்க மறுப்புவளர்ந்த நாடுகளுக்கு இடையேயான ஜி 20 உச்சி மாநாடு ஜெர்மனியின் ஹேம்பர்கில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பல வளர்ந்த நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஜெர்மனிக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் நட்சத்திர விடுதிகளில் தங்குவதற்காக அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடன் வந்தவர்களுக்கு மட்டும் தங்குவதற்கு நட்சத்திர விடுதியில் அறை கிடைக்கவில்லை. எந்த விடுதியை தொடர்பு கொண்டாலும் அறை முழுவதும் நிரம்பி விட்டதாக கூறியுள்ளனர்.

இது பற்றி உள்ளூர் பத்திரிக்கையில், ஃபோர் சீசன்ஸ் எனும் பிரபல நட்சத்திர ஹோட்டலை அமெரிக்க அதிபர் தொடர்பு கொண்டபோது அறைகள் அனைத்தும் நிரம்பி விட்டதாக விடுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டொனால்டு டிரம்பிற்கு அறை முன்பதிவு செய்வதற்காக அவரது குழுவினர் நீண்டநேரம் காத்திருந்ததாக அமெரிக்க இணையதள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.