அல் - அக்ஸா அருகே துப்பாக்கி சூடு ; ஜும்மா தொழுகைக்கு தடைஅல் - அக்ஸாஅருகே இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சந்தர்ப்பத்தில் மூன்று பலஸ்தீனர்கள் கொள்ளப்பட்டுள்ளதோடு இரு இஸ்ரேலிய பொலீசார் பலத்த காயங்களுக்கு உள்ளான சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

கொள்ளப்பட்ட நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தினால் தமது தரப்பில் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இச் சம்பவத்தின் பிண்ணனியில் இன்று அங்கு ஜும்மா தொழுகையை நிறைவேற்ற முடியாதபடி இஸ்ரேலிய இராணுவத்தினரால் அல் - அக்ஸப வளாகம் மூடப்பட்டுள்ளதோடு ஒரு பலஸ்தீனரை அல்- அக்ஸா வளாகத்திற்குள் வைத்தே இஸ்ரேலிய படையினர் சுட்டுக் கொண்டுள்ளனர்.