ராஜகிரியவிலுள்ள எரிவாயு விற்பனை நிலையம் தீ பற்றி எறிந்தது
ராஜகிரியவில் உள்ள சுப்பர் மார்க்கட் ஒன்றில் காணப்பட்ட எரிவாயு விற்பனை நிலையமொன்று இன்று (02) அதிகாலை 5.30 மணியளவில் தீப்பிடித்துள்ளது.
இந்த தீ சுப்பர் மார்க்கட் கட்டிடத் தொகுதி முழுவதும் பரவும் அபாய நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை அணைப்பதற்கு கோட்டை நகர சபை தீயணைப்புப் பிரிவின் 3 வாகனங்களும், தெஹிவளை கல்கிஸ்ஸை நகர சபை வாகனமொன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ராஜகிரியவிலுள்ள HSBC கட்டிடத் தொகுதிக்கு அருகில் இந்த எரிவாயு நிலையம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது