இலங்கை மற்றும் கட்டாருக்கு இடையில் முக்கிய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது


இலங்கை மற்றும் கட்டாருக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது குறித்த முக்கியமான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
கட்டார் பிரதமர் Sheikh Abdullah bin Nasser bin Khalifa al-Thani மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும் இடையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
டோஹாவில் நேற்று இந்தப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, கட்டார் வெளிவிவகார அமைச்சர் Sheikh Mohamed bin Abdulrahman al-Thaniயும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் நேற்று சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.