தொலைத்த புகைப்பட கருவி முஸ்லீம் இளைஞரால் கிடைக்கப்பெற்றது

Jul 24, 20170 commentsபாறுக் ஷிஹான்

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சுமார் ஒன்றரை இலட்சம் பெறுமதியான புகைப்பட  கருவி காணாமல் தொலைத்த நபருக்கு மீண்டும் நல்ல மனம் கொண்ட முஸ்லீம் இளைஞரால் கிடைக்கப்பெற்றுள்ளது.

இவ்விடயம் குறித்து தெரியவருவதாவது,

கல்முனை பிரதேச செயலகத்தில் கடந்த   புதன் கிழமை (19) ஆம் திகதி   குறுந்திரைப்படம்   வெளியீடு ஒன்றின்   பின்னர்  சுமார் 150000 இலட்சம்  பெறுமதியான கமரா தொலைந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது..

இக்கமராவினை தொலைத்தவர்    மூன்று நாட்களாக தேடியும் எவ்வித பலனும்  கிடைக்கவில்லை . ஆனால்  கமராவினை தொலைத்தவரின்  வீட்டருகில் இருந்த  அறிமுகம் இல்லாத இளைஞர்    ஒருவர் என்னைத் தெரியுமா என்று கேட்டு வந்துள்ளார்.

ஆனால்   நான் அவரை  தெரியாது என்று கூற  அப்போது  அவர் சொன்னார் உங்களை நான்தான் கடந்த   புதன் கிழமை   ஏற்றிச் சென்றவன் உங்களுடைய கமரா இதுதானே என்று காட்டினார் என்னவென்று சொல்வது திகைத்து நின்றேன் வந்தவரை ஆறத்தழுவி பாராட்டினேன் கண்கலங்கிவிட்டேன் .
என தனது முகநூலில் சந்தோசமாக கருத்துக்களை தெரிவித்துள்ளார்.


இதனால் தான்   இப்படியான நல்ல மனிதர்களை சமூகத்திற்கு எடுத்துக்காட்டாமல் இருக்க முடியாது என்பதற்கு இணங்க இச்செய்தியை வெளிப்படுத்துகின்றோம்.

இவ்வாறு கமராவினை  மீள பெற்றுக்கொடுத்தவர்   மட்டக்களப்பு    சிறைச்சாலை உத்தியோகத்தரான    நற்பட்டிமுனை பகுதியை சேர்ந்த     எஸ்.எம்.நவாஸ் என்பவராவார்.
Share this article :